தமிழகத்தில் இருந்து இரண்டே நாட்களில் 6.75 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

0 4205

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் சுமார் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, கடந்த இரண்டு நாட்களாக அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 4 ஆயிரத்து 993 பஸ்கள் மூலம் 6 லட்சத்து 75 ஆயிரத்து 384 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கப்படுவதை நேற்று மாலை ஆய்வு செய்தார்.

நேற்று நள்ளிரவு 11.45 மணி வரையில் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments