இன்று முதல் வருகிற 7-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

0 5023
இன்று முதல் வருகிற 7-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று முதல் வருகிற 7-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவை நீட்டித்து காவல்துறை ஆணையர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.

காலை 6 மணியில் இருந்து காலை 10 மணிவரை 4 மணிநேரம் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 7-ந் தேத வரை ஊரடங்கை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

அதே நேரத்தில் பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு உத்தரவை கடுமையான அமல்படுத்தும்படியும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் காவல்துறையினருக்கு முதல்-அமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு நகர் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments