தலைநகரில் குறையும் கொரோனா... கட்டுப்பாடுகளைத் தளர்த்த டெல்லி அரசு முடிவு

0 1363

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பரவலாக தினசரி கொரோனா தொற்று குறைந்துவருகிறது. பல வாரங்களாக பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றன.

மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான டெல்லி கடந்த ஏப்ரல்20ம் தேதி முதல் ஊரடங்கிற்கு ஆளானது. மே 31 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொடர்ந்து தொற்று பரவல் குறைந்துவந்தால் அடுத்த மாதத் தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments