கோவாக்சின் - உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய யூனியனிடம் மத்திய அரசு அங்கீகாரம் கோர முடிவு

0 1856

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கொரோனா தடுப்பூசி கோவாக்சினுக்கு அங்கீகாரம் அளிக்கும்படி உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியனிடம் மத்திய அரசு வலியுறுத்த முடிவு செய்துள்ளது.

27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியன் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டும் பயணிக்க அனுமதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காததால் பல நாடுகள் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களை அனுமதிப்பதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி உள்பட லட்சக்கணக்கானோர் கோவாக்சின் தடுப்பூசிப் போட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments