மல்யுத்த வீரர் கொலை வழக்கில் கைதான சுஷில்குமார் 6 நாட்கள் போலீஸ் காவல்

0 1383

ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற சுஷில் குமார் மற்றும் அவரது கூட்டாளிக்கு மல்யுத்த வீரர் கொலை வழக்கில் 6 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தான்கர் மற்றும் அவர் நண்பர்களை கடந்த 4ந்தேதி, சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் டெல்லியில் உள்ள அரங்கில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் சாகர் உயிரிழந்தார். மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 10 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார்.

பல்வேறு மாநிலங்களில் திரிந்த சுஷில்குமாரைப் பிடிக்க முடியாமல் திணறிய போலீசார் அவரை பிடிக்க பரிசுத் தொகை அறிவித்தனர். இந்நிலையில், மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்படுவதில் இருந்து தவிர்ப்பதற்காக டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது கூட்டாளி டெல்லி போலீசாரால் அஜய் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments