அசாமில் ரயில் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை: ரயில்நிலையத்தில் இருந்து தெரித்து ஓடிய பயணிகள்... வைரல் வீடியோ

0 5142

அசாமில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் தப்பிக்க நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள் அவசர அவசரமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய காட்சி வெளியாகியுள்ளது.

அசாமில் ரயில் பயணிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து திப்ருகார் செல்லும் விவேக் விரைவு ரயில் அசாமில் உள்ள ஜாகி ரோடு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.

அதில் இருந்து இறங்கிய 400க்கும் மேற்பட்ட பயணிகள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் தப்பிச்செல்லும் வகையில் அவசர அவசரமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய நிலையில், அதில் சிலரை மட்டுமே ரயில்வே அதிகாரிகள் பிடித்து தொற்று பரிசோதனை செய்ய வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments