ஜூன் 1 முதல், 2 வயது முதல் 18 வயதுடையோருக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை

0 1862

குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை ஜூன் முதல் தேதியில் தொடங்குகிறது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவேக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் பெண் உறுப்பினர்களுடன் பாரத் பயோடெக் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு பிரிவின் தலைவர் டாக்டர் ரச்சஸ் எல்லா காணொலி மூலம் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தடுப்பூசி உற்பத்தி பணியை குஜராத், பெங்களூரு ஆகிய இடங்களிலும் விரிவுபடுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி திறனை 70 கோடியாக உயர்த்த உள்ளதாக டாக்டர் ரச்சஸ் தெரிவித்தார்.

2 வயது முதல் 18 வயதுவரை உள்ளவர்களுக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி போட்டு பரிசோதிக்க அனுமதி கிடைத்துள்ளது என்றும் இந்த பணி ஜூன் 1-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments