மும்பை அருகே கப்பல் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 86 ஆக உயர்வு

0 1377

மும்பை அருகே கடலில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 188 பேர் மீட்கப்பட்ட நிலையில் 86 பேர் உயிரிழந்துவிட்டனர்.

அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.கப்பலின் மூழ்கிய பகுதிகளை கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.கடந்த மே 17ம் தேதி அரபிக் கடலில் வீசிய டவ்தே புயலில் இரண்டு எண்ணெய் நிறுவன கப்பல்கள் கடலில் மூழ்கின.

இதில் 274 பேர் காணவில்லை . காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.188 பேர் உயிருடன் மீட்கப்பட்டு எஞ்சிய 86 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு தேடுதல் நிறைவு பெற்றது.

இரண்டாவது கப்பலின் எஞ்சிய பாகங்களைக் கண்டுபிடிக்க இன்றும் நீர்மூழ்கி வீரர்கள் தேடுதலைத் தொடர இருப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments