தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 35,483பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

0 1492

மிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு , 2- வது நாளாக சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 35 ஆயிரத்து 483 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 25 ஆயிரத்து 196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 26 வயது கோவை இளம்பெண், 27 வயது
சேலம் இளைஞர், 90 வயது சென்னை முதியவர்,95 வயது நாகை மற்றும் வேலூர் முதியவர்கள், 99 வயது சென்னை முதியவர் உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 422 பேர் பலியானார்கள்.

சென்னையில் புதிதாக 5,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவையில் 3,944 பேரும் செங்கல்பட்டில 1,982 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பூர் - 1,446, திருச்சி - 1,407, ஈரோடு - 1,352 , திருவள்ளூர் - 1259 , தஞ்சாவூர் - 1176, கன்னியாகுமரி -1,160, மதுரை - 1,139, நாமக்கல் - 1032 மற்றும் காஞ்சிபுரத்தில் 897 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள், 1,389 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. மாநிலம் முழுவதும் 2,94,143 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments