சென்னையில் 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவால் பலி..! தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இல்லை

0 9025
சென்னையில் 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவால் பலி..! தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இல்லை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகாவின் குடும்பத்தினர், சிலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கார்த்திகாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கும் தொற்று உறுதியானதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொற்றின் தீவிரத்தால் கடந்த வாரம் சென்னை வானகரத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட கார்த்திகாவுக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்கவில்லை. இதனால் கடந்த 19ஆம் தேதி கிரீம்ஸ் ரோட்டிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த, அவர் அதிகாலை உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments