மீன்பிடிக்க சென்று கடலில் காணாமல்போன 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

0 793

மீன்பிடிக்க சென்று கடலில் காணாமல்போன 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கன்னியாகுமரி மற்றும் வங்கதேசத்திலிருந்து கேரள கடல்பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்ற 16 மீனவர்கள் டவ் தே புயலுக்கு பின் காணாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, இந்திய கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ள நிலையில், இதுவரை தகவல் ஏதும் இல்லாததால் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments