ஊரடங்கு காலத்தில் பசிப்பிணி போக்கும் பணியில் ஈடுபட திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!

0 1688

முழு ஊரடங்கால் தமிழக மக்களின் உணவுத் தேவைக்கு எந்த தடையும் ஏற்படாத வகையில் பசிப்பிணி போக்கும் பணியில் ஈடுபடுமாறு திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏழை - எளிய மக்கள், வீட்டில் சமைக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட யார் யாருக்கெல்லாம் உணவு தேவைப்படுகிறது என்பதை அறிந்து, இருக்கும் இடம் தேடிச்சென்று உதவிடுமாறு அறிக்கையொன்றில், முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்புப் பணியில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments