டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 2.42 சதவீதமாகக் குறைந்தது..!

0 2445

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் இரண்டரை விழுக்காட்டுக்கும் கீழ் குறைந்துள்ள போதும், ஊரடங்கை மேலும் ஒருவாரத்துக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீட்டித்துள்ளார்.

டெல்லியில் நேற்று 68 ஆயிரத்து 43 மாதிரிகளைச் சோதனை செய்ததில் 1649 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது. இந்நிலையில் நாளைக் காலையுடன் முடியவிருந்த ஊரடங்கு மேலும் ஒருவாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தால், மே 31 முதல் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments