திருமணத்தன்று இரவே ஏற்பட்ட சர்ச்சை..! இரு வீட்டாரும் காவல் நிலையத்தில் புகார்; நாடகமாடுவது யார்?

0 159649
திருமணத்தன்று இரவே ஏற்பட்ட சர்ச்சை..! இரு வீட்டாரும் காவல் நிலையத்தில் புகார்; நாடகமாடுவது யார்?

திருமணத்தன்று இரவு ஏற்பட்ட சர்ச்சை காரணமாக பெண் வீட்டார் மாப்பிள்ளை மீதும், மணமகன் வீட்டார், மருமகள் மீதும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சந்தைபேட்டையை சேர்ந்தவர் முத்துவேல் என்பவரின் மகன் வெற்றிவேல் .

பி.இ., பட்டதாரியான இவருக்கும் அறந்தாங்கியை சேர்ந்த சூரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 17 ம் தேதி புதுவயலில் உள்ள கோவிலில் பெரியோர்கள் முன்னிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக எளிய முறையில் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

திருமணத்தன்று இரவு, புதுமாப்பிள்ளை வெற்றிவேல் மனைவி சூரியாவிடம் ‘‘ திருமணத்திற்கு முன்பு தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அதில் தோல்வியடைந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், பெற்றோர்கள் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்துள்ளேன். கடைசி வரை உன்னை நல்ல முறையில் காப்பாற்றுவேன்’’ என கடந்த கால நினைவுகளை மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது.

அதிகாலை கண்விழித்த வெற்றிவேல் தனது தந்தையை எழுப்பி, தனது அறையில் மனைவி சூரியா மயங்கி கிடப்பதாக கூறியுள்ளார். இதனால் பதறிப்போன வெற்றிவேலின் பெற்றோர் , சூரியாவை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், இது குறித்து சூரியாவின் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்.

மருத்துவமனையில், மயக்கம் தெளிந்த சூர்யா , தனது பெற்றோரிடம் ‘‘தனது கணவர் சைகோ போல நடந்து கொண்டதாகவும், தன்னிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி முடியை வெட்டி, மயக்க மாத்திரை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த சூர்யாவின் பெற்றோர், மருமகன் மீது காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து , புதுமண தம்பதியை மகளிர் காவல்துறையினர் திவீர விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், மணப்பெண்ணுக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும் பெற்றோர் வற்புறுத்தலின் பெயரிலேயே இத்திருமணம் நடைப்பெற்றிருப்பதும் தெரியவந்தது.

தனக்கு பிடிக்காத திருமணம் என்பதால், தன்னை சமத்துபிள்ளை போல காட்டிக்கொள்ள கணவன் மீது வீண் பழி சுமத்துவதற்காக , சூர்யா இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மணமகன் வீட்டார், சூர்யா கூறுவது அனைத்தும் பொய் அவரை நன்கு விசாரிக்கவேண்டும் என்று அதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினரின் புகார் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்தன்று இரவே , பெண் வீட்டார் மாப்பிள்ளை மீதும், மாப்பிள்ளை குடும்பத்தினர் பெண் மீதும் ஒருவருக்கொருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments