தளர்வுகளற்ற ஊரடங்கு... இன்றே நடந்து முடிந்த திருமணங்கள்..!

0 27591

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலாகவுள்ளதால், ஏற்கனவே நடத்த திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் இன்றே எளிமையான முறையில் நடத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோயிலில் 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் எளிமையான முறையில் தனிமனித இடைவெளியுடன் நடைபெற்றது.
நாளை நடைபெறவிருந்த திருமணங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக இன்று நடத்தப்பட்டுள்ளது.

விருதுநகரில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வாசலில் 5க்கும் மேற்பட்ட திருமணங்கள் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அனைவரும் முகக்கவசம் அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டனர்

தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ்-சுடலை வடிவு ஆகியோருக்கு
வரும் 28ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக பழமை வாய்ந்த சிவன் கோயில் முன் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் - முத்துலட்சுமி இல்ல திருமணம் திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி எளிமையான முறையில் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments