டெல்லியில் முழு ஊரடங்கு வரும் 31ந் தேதி வரை நீட்டிப்பு

0 1327

டெல்லியில் முழு ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 19 தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதனை மே 31 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை நீட்டித்து உத்தரவிட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா பாதிப்பு குறைந்துகொண்டே வருவதால் மே.31 ஆம் தேதிக்கு பின் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பதால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments