இளைஞர் கன்னத்தில் அறைந்த கலெக்டர்... பணியிடை நீக்கம் செய்து சத்தீஸ்கர் முதலமைச்சர் உத்தரவு

0 6845

சத்தீஸ்கர் மாநிலத்தில் மருந்து வாங்க சென்ற இளைஞரை கன்னத்தில் அறைந்து, செல்போனை தூக்கி வீசி உடைத்த மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரடங்கு கட்டுபாடுகள் காரணமாக, சுராஜ்பூர் மாவட்டத்தில் போலீசாருடன் ஆட்சியர் ரன்பீர் ஷர்மா சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த இளைஞர் மருந்து வாங்க செல்வதாக ரசீதை காண்பித்தும் அதனை ஏற்க மறுத்த ஆட்சியர் இளைஞரின் செல்போனை தூக்கி வீசி உடைத்ததோடு கன்னத்தில் பளார் என அறைந்தார்.

அப்படியும் கோபம் அடங்காத ஆட்சியர், போலீசாரையும் அழைத்து இளைஞரை தாக்கும்படி கூறியுள்ளார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து ஆட்சியர் மன்னிப்பு கோரினார். இருப்பினும் இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ஆட்சியர் ரன்பீர் ஷர்மாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments