தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

0 5040

கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மத்திய கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிப்பதாகவும், இது மேலும் வலுவடைந்து விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 24 ஆம் தேதி புயலாக வலுவடைந்து வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிற 26 ஆம் தேதி ஒடிசா - வங்க தேசம் இடையே கரையை கடக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments