இந்தியாவில் ஒரேநாளில் 2.40 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி

0 1431

இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 ஆக பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் ஒரே நாளில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 102 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதே நேரம், 3 ஆயிரத்து 741 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடக்கவுள்ளது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 28 லட்சத்து 5 ஆயிரத்து 399 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுவரை 19 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments