குழந்தைகளைத் தாக்குமா கொரோனா மூன்றாவது அலை ?

0 3238

கொரோனா மூன்றாவது பேரலை எழும்போது குழந்தைகள் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது என்பது உண்மைதான் என்ற போதும் பாதிப்பு மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

கொரோனாவால் அடுத்து குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று வெளியான செய்திகள் குறித்து நிதி ஆயோக்கின் சுகாதாரத் துறை உறுப்பினரான வி.கே.பால் விளக்கம் அளித்துள்ளார். சுகாதார அமைச்சகத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய வி.கே.பால் குழந்தைகளுக்கு லேசான பாதிப்பு தான் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார் .பொதுவாக குழந்தைகள் உடலில் அறிகுறிகள் அதிகமாகத் தெரிவதில்லை என்றும் அவர் கூறினார்.

குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்காது என்றும் வி.கே.பால் தெரிவித்தார். அண்மையில் பிரதமர் மோடி குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் கொரோனா பரவாமல் தடுக்கும்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments