ஜூன் 1 தேதியில் இருந்து ஊரடங்குக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும்: மத்தியப் பிரதேச முதலமைச்சர் அறிவிப்பு

0 2020

ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து ஊரடங்குக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் என்று மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார் .

மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மூத்த அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய சிவராஜ்சிங் 5 சதவீதம் பேர் தான் சிகிச்சை பெறுவதாகவும் 90 சதவீதம் பேர் குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

82 ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில் 3 ஆயிரம் பேருக்கு மட்டும் கொரோனா பாஸிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மும்மடங்கு இருப்பதாகவும் மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

தற்போது மத்தியப் பிரதேச அரசு குடும்பத்திற்கு மாதம் 5 ஆயிரம் ரூபாயும் இலவச ரேசன் பொருட்களும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வியும் அளிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments