வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

0 1557

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று குமரி மாவட்டத்தில் கனமழையும், உள் மற்றும் கடலோர மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மத்திய வங்கக்கடலில் புயல் உருவாவதின் எதிரொலியாக இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலேயே நிலவும். தமிழக கடலோர பகுதி, வங்கக்கடல், மன்னார்வளைகுடா பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், 4 நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments