கொரோனா தனிமை.. தாயிக்காக வீட்டை கொடுத்த விவசாயி..! ஸ்ட்ரிக்டான கிராம மக்கள்

0 4219
கொரோனா தொற்றுக்குள்ளான தனது தாய் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக தனது வீட்டை முழுமையாக விட்டுக் கொடுத்த பாசக்கார விவசாயி ஒருவர், தனது மனைவி குழந்தைகளுடன் விவசாய நிலத்தில் டிராக்டருடன் கூடாரம் அமைத்து தங்கிவருகின்றார்.

கொரோனா தொற்றுக்குள்ளான தனது தாய் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக தனது வீட்டை முழுமையாக விட்டுக் கொடுத்த பாசக்கார விவசாயி ஒருவர்,  தனது மனைவி குழந்தைகளுடன் விவசாய நிலத்தில் டிராக்டருடன் கூடாரம் அமைத்து தங்கிவருகின்றார்.

தாயோ தந்தையோ வயது முதிர்ந்த பெற்றோரை கொரோனா சிகிச்சைகாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டால் எட்டிப்பாக்க கூட ஆள் இல்லாமல் தவித்து வரும் நிலையில் தனது தாய்க்காக வீட்டையே விட்டுக் கொடுத்துள்ளார் வாரங்கல் வர்தனபெட்டா மண்டலம் இலந்தா கிராமத்தைச் சேர்ந்த பாசக்கார விவசாயி ராஜ்குமார்..!

அவரது தாய் போய்னா வெங்கடலட்சுமி ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினர் யாரும் விட்டை விட்டு ஊருக்குள் வர வேண்டாம் என்று கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கிராமவாசிகள் அவர்களுக்கு கட்டுப்பாடு விதித்தனர். அவர்களுடைய வீடு சிறியது என்பதால் வீட்டில் கொரோனா நோயாளியான தனது தாயை எப்படி தனிமைப்படுத்துவது என்று யோசித்த ராஜ் குமார், தனது தாய் வெங்கடலட்சுமியை மட்டும் வீட்டில் தனிமைப்படுத்தி வைப்பது என்று முடிவெடுத்தார்.

அரசு மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லை என்பதால் தாயை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள கூறிவிட்டு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனது விவசாய நிலத்திற்கு சென்ற ராஜ்குமார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது டிராக்டரில் கூடாரம் அமைத்து அதனையே வீடாக மாற்றி அங்கு வசித்து வருகின்றார்.

தினமும் 3 முறை தனது தாயை சந்தித்து அவருக்கு தேவையான உணவுகளை வழங்கி வருகின்றார் இந்த பாசக்கார விவசாயி. இதேபோல அதே கிராமத்தைச் சேர்ந்த புஸ்ஸா சம்மா என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரை வீட்டில் தனிமைப்படுத்திய, அவரது மகன் எல்லசுவாமி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மாந்தோப்பில் கூடாரம் அமைத்து வசித்து வருகிறார்.

கொரோனா நோயாளிகளை அரசு முகாம்களில் தனிமைப்படுத்த போதுமான இடம் இல்லாததால் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அதிகாரிகள் அறிவுறுத்திவருகின்றனர். ஒரே வீட்டில் நான்கு ஐந்து பேர் வசிக்கும் நிலையில் போதிய இடவசதி இல்லாவிட்டாலும் அவர்கள் மனதில் இடம் இருப்பவர்கள் இதுபோன்று தங்கள் குடும்பத்தில் ஒருவருக்காக தங்கள் வீட்டையே தங்கிக் கொள்ள கொடுத்து விட்டு கூடாரம் தேடிச் செல்கின்றனர்.

அதே நேரத்தில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்திக் கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அரசு முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்று தெலங்கான மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments