தடுப்பூசி போடுவதில் கோவைக்கு பாரபட்சமா? சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

0 3055
கொரோனா தடுப்பூசி போடுவதில், கோவைக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல் உண்மையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடுவதில், கோவைக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல் உண்மையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை காரப்பாக்கத்தில் 70 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ மையத்தை தொடங்கி வைத்த அவர், சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 5லட்சத்து4ஆயிரம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்துக்கு இதுவரை 78லட்சத்து 49ஆயிரம் தடுப்பூசி மத்திய அரசு கொடுத்துள்ளதாகவும், அதில் 2லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் கூறிய அமைச்சர், தமிழகத்தில் 6சதவீதம் தடுப்பூசி விரயமாகியுள்ளதாகவும் தெரிவித்தார். எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments