தடுப்பூசி இறக்குமதி - மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கோரிக்கை

0 895
பல நாடுகளில் தேவைக்கு அதிகமாக இருக்கும் தடுப்பூசியை உடனடியாக வாங்கி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

பல நாடுகளில் தேவைக்கு அதிகமாக இருக்கும் தடுப்பூசியை உடனடியாக வாங்கி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவது டெல்லியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு இரண்டரை கோடி தடுப்பூசி டோசுகள் தேவைப்படும் நிலையில் இந்த மாதம் 16 லட்சம் டோசுகள் மட்டுமே கிடைத்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

இதே நிலைமை பல மாநிலங்களிலும் உள்ளதால், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து 24 மணி நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை வாங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments