8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன முதியவரை குடும்பத்துடன் சேர்த்து வைத்த சென்னை போலீசார்..!

0 2278
உத்தரபிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன, முதியவரை கண்டுபிடித்து சென்னை போலீசார் குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன, முதியவரை கண்டுபிடித்து சென்னை போலீசார் குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர்.

சென்னை பாண்டி பஜார் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் தாஹிரா, இதற்கு முன் மாநில குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் இருந்தார்.

இதுவரை காணாமல் போன 300 பேரை கண்டுபிடித்து குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளார். இந்த நிலையில், ராமேஸ்வரத்திலுள்ள மனநல காப்பகத்தில் குணமடைந்த நபர் ஒருவர் குடும்பத்துடன் சேர விரும்புவதாக தாஹிராவுக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில் அவர் லக்னோவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் குப்தா எனவும், மனநலம் பாதிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதும் தெரியவந்தது. இதனையடுத்து, லக்னோவிலுள்ள காவல் நிலைம் மூலம் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்து, சேர்த்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments