கொரோனாவால் மாடியில் இருந்து குதித்த டிராவல்ஸ் அதிபர் ..! ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் விபரீதம்

0 5470
சென்னை அருகே தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியிதாக சொல்லப்படும் நிலையில் கொரோனா நோயாளி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அருகே தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியிதாக சொல்லப்படும் நிலையில் கொரோனா நோயாளி  ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அகரம் ரத்தினமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். 52 வயதான இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக சளி இரும்பல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்துள்ளது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை சேலையூரில் உள்ள சுந்தர் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்த காரணத்தால் ஆக்சிஜன் உடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு இருப்பதாக கூறி ராஜேந்திரனை வேறு மருத்து வமனைக்கு கொண்டு செல்லுமாறு உறவினர்களிடம் மருத்துவமனை சார்பில் கூறியுள்ளனர்.

இரவு மட்டும் சிகிச்சை அளிக்குமாறு உறவினர் கேட்டுக் கொண்டு வீட்டுக்கு சென்ற நிலையில் சனிக்கிழமை அதிகாலை ராஜேந்திரன் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையிலிருந்து ராஜேந்திரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த ராஜேந்திரனின் உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகம் ஆக்சிஜன் வழங்காததால்தான் ராஜேந்திரன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என குற்றம்சாட்டி போராட்டத்தில் குதித்தனர். நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் வீதம் 1லட்சத்தும் 20 ஆயிரம் ரூபாயை தனியார் மருத்துவமனைக்கு கட்டணமாக கட்டியிருந்ததாக கூறப்படுகின்றது.

மருத்துவமனைக்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர். நோயாளிக்கு உரிய பாதுகாப்பின்றி கவனக்குறைவாக சிகிச்சை அளித்தது, தற்கொலை ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்களை காக்க அரசு மருத்துவமனைகளில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளோ ஏற்கனவே ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள சூழலில், தங்களிடம் இருக்கின்ற ஆக்சிஜன் எப்போது தீரும் என்பது தெரியாமல் திக் திக் மன நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

ஆக்ஸிஜன் தீரும் நிலை ஏற்பட்டால் ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அவசர அவசரமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் சில தனியார் மருத்துவமனைகள் அதிகம் ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிப்பதை தவிர்த்து, சாதாரண அறிகுறியுள்ள கொரோனா நோயாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சைக்காக அனுமதித்து வருவதாக கூறப்படுகின்றது.

உறவினர்களின் குற்றச்சாட்டு குறித்து சுந்தர் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்க மறுத்து விட்டனர்.

கொரோனாவின் வலிகொடுமையானது என்பதை உணர்ந்தாவது ஊரடங்கை மதித்து மக்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே தனித்திருப்பது அவசியம் இல்லையேல் ஆக்சிஜன் படுக்கை தேடி ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக அலையும் பரிதாப நிலை ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments