தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 4595
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் கனமழையும், உள் மற்றும் கடலோர மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மத்திய வங்கக்கடலில் புயல் உருவாவதின் எதிரொலியாக, தரைக்காற்று மேற்கு வடமேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதால் நாளை முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலேயே நிலவும்.

வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இரண்டிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். தமிழக கடலோர பகுதி, வங்கக்கடல், மன்னார்வளைகுடா பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், 4 நாட்களுக்கு மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments