கோவையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

0 2816

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கொரோனா நோயாளி ஒருவர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துவரப்பட்டார். ஆம்புலன்சில் இருந்து நோயாளியை இறக்கி செவிலியர்கள் உள்ளே அழைத்துச் சென்ற நிலையில், ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

ஆம்புலன்ஸ் அருகில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கக்கூடும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments