ஊரடங்கை நீட்டிக்கலாம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை?

0 4950

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் 14 நாட்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மே 10 முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு திங்கள் அதிகாலை முடிவடைய உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 36 ஆயிரத்து 184 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும் வீட்டுத் தனிமையிலும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இந்த மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் உச்சத்தைத் தொடும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் 2 வாரங்களுக்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என முதலமைச்சரிடம் மருத்துவ வல்லுநர் குழுவினர் கேட்டுக்கொண்டனர். கொரோனா தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments