இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

0 4994

கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்தாலும், அதற்கு பலியாவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து நிற்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 299 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. ஆனால் இறப்பு எண்ணிக்க்கை 4 ஆயிரத்து 194 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 3 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நோயில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதுவரை நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 525 ஆக உயர்ந்துள்ளது. ஆக்டிவ் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 29 லட்சத்து 23 ஆயிரத்து 400 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரத்து 819 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments