சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 2 பேர் பலி - 17 பேர் படுகாயம் எனத் தகவல்

0 1777

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்தும், 17 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தென்மேற்கு மாகாணமான யுனானில் உள்ள யங்பி யி நகரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன அவசரநிலை மேலாண்மை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் படையினர் தொடர்ந்து மீட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் 5 ரிக்டர் அளவுகோளில் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 6 புள்ளி 4 ரிக்டர் அளவுகோளில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments