கேரளாவில் இம்மாத இறுதிவரை ஊரடங்கு தொடரும்

0 1979

கேரளாவில் கொரோனா கட்டுக்குள் வராததையடுத்து ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் விதிக்கப்பட்ட மும்மடங்கு கடுமையான ஊரடங்கு கைவிடப்பட்டு வழக்கமான ஊரடங்காக அமலில் இருக்கும். மல்லபுரத்தில் மட்டும் மும்மடங்கு கடுமை நீடிக்கும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் கொரோனாவால் 142 பேர் உயிரிழந்தனர். மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக உயிரிழப்போரின் எண்ணிக்கை நூறை கடந்து விட்டது. கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் புதிதாக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த 8ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments