மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

0 3871

கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் நடக்கிறது. மருத்துவ நிபுணர்களுடனும் முதலமைச்சர் இன்று கலந்தாலோசிக்க உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது 36 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு 24ந் தேதியுடன் நிறைவடைகிறது. கடும் கட்டுப்பாடுகள் காரணமாக சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மற்ற பகுதிகளிலும் படிப்படியாக நோய்த்தொற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுனர் குழுவுடன் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

அத்துடன், கொரோனா தடுப்பு ஆலோசனைக்காக அமைக்கப்பட்ட 13 சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்தாலோசிக்கிறார். தலைமைச் செயலகத்தில் காலை 11.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

மருத்துவ வல்லுனர்கள் மற்றும் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுவினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஊரடங்கை நீட்டிப்பது, கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments