புயல் உருவாகிறது... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

0 3781
புயல் உருவாவதையொட்டித் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புயல் உருவாவதையொட்டித் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

வங்கக் கடலில் உருவாகும் புயல் மே 26ஆம் நாள் ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது.

இதனால் தமிழகம், ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும், அந்தமான் தீவிலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மத்திய நலவாழ்வுத் துறைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் கொரோனா சிகிச்சை முகாம்களில் உள்ள நோயாளிகளை வேறு முகாமுக்கு மாற்ற அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் மின்சாரம், தண்ணீர், எரிபொருள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments