டெல்லியில் கொரோனா தொற்று கண்டறியப்படுவோர் விகிதம் குறைந்தது..! வியாழனன்று 3009 பேருக்கு பாதிப்பு; 252 பேர் உயிரிழப்பு

0 1823
டெல்லியில் கொரோனா தொற்று கண்டறியப்படுவோர் விகிதம் குறைந்தது..! வியாழனன்று 3009 பேருக்கு கொரோனா பாதிப்பு; 252 பேர் உயிரிழப்பு

டெல்லியில் கொரோனா சோதனை மாதிரிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தொற்றால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 5 விழுக்காட்டுக்கும் கீழாகக் குறைந்துள்ளது.

வியாழனன்று 63 ஆயிரத்து 190 மாதிரிகள் சோதனை செய்ததில் மூவாயிரத்து ஒன்பது பேருக்குத் தொற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் 252 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இன்றைய நிலவரப்படி தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 683 ஆகும்.

டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 19 அன்று தொடங்கிய ஊரடங்கு மே 24ஆம் நாள் அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொற்றுப் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments