மும்பை அருகே கடலில் கப்பல் மூழ்கிப் பலர் உயிரிழந்தது தொடர்பாக கேப்டன் மீது வழக்கு

0 1486
மும்பை அருகே கடலில் கப்பல் மூழ்கிப் பலர் உயிரிழந்தது தொடர்பாகக் கப்பலின் கேப்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை அருகே கடலில் கப்பல் மூழ்கிப் பலர் உயிரிழந்தது தொடர்பாகக் கப்பலின் கேப்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய்க் கிணறு பணிக்காக நின்ற கப்பல் புயலின்போது கடலில் மூழ்கியது. அதில் இருந்து குதித்துக் கடலில் தத்தளித்த 188 பேரைக் கடற்படையினர் உயிருடன் மீட்டனர்.

உயிரிழந்த 51 பேரின் உடல்களையும் கண்டெடுத்தனர். உயிர்தப்பிய தலைமைப் பொறியாளர் ரகுமான் சேக் அளித்த புகாரின் அடிப்படையில் கப்பலின் கேப்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புயல் வருவது தெரிந்தும் கப்பலைப் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்திச் செல்லாமல் இருந்ததாகவும், கப்பலில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுந்ததை உரிமையாளருக்கும், கேப்டனுக்கும் தெரிவித்தபோதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். காணாமல் போன 24 பேரில் கப்பல் கேப்டனும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments