அரசின் மருத்துவக் காப்பீடு அட்டை பெற கொரோனா நோயாளியை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவைத்த அதிகாரிகள்; எச்சரித்து அனுப்பிய ஆட்சியர்

0 1526
அரசின் மருத்துவக் காப்பீடு அட்டை பெற கொரோனா நோயாளியை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவைத்த அதிகாரிகள்; எச்சரித்து அனுப்பிய ஆட்சியர்

சிவகங்கையில் அரசின் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெறுவதற்காக மனநலம் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளியை ஆட்சியர் அலுவலகத்திற்கே ஆம்புலன்ஸ்சில் அதிகாரிகள் வரவழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

லாடனேந்தல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அதற்கான அட்டை இல்லாததால், அட்டையைப் பெற காப்பீடு திட்ட அதிகாரிகள் நோயாளியை சிவகங்கைக்கு நேரில் வரக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்காக 50 கி.மீ ஆம்புலன்ஸிலேயே மதுரையில் இருந்து சிவகங்கைக்கு நோயாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதனைக் கண்ட மற்ற அலுவலர்கள் அச்சமடைந்து ஆட்சியருக்கு தகவல் தந்ததை தொடர்ந்து, அங்கு வந்த ஆட்சியர் உடனடியாக நோயாளியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, திட்ட அதிகாரிகளை எச்சரித்து அனுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments