சென்னையில் குடிநீர் செல்லும் கால்வாயில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சாம்பல் கலக்கப்படுகிறதா..?

0 5280
சென்னையில் குடிநீர் செல்லும் கால்வாயில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சாம்பல் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் குடிநீர் செல்லும் கால்வாயில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சாம்பல் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில்  இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக  ஈக்காடு, சிறுகடல், அரண்வாயல் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றால்  உயிரிழந்தவர்களின் சாம்பலை அவர்களது உறவினர்கள்  ஈக்காடு இணைப்பு கால்வாயில் கலந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் தண்ணிர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில்  இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments