அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 20251

வெப்பச்சலனம் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல்  உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments