தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

0 8476

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 35ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளவேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுனர் குழுவுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

வல்லுனர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பது, கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments