நாடு முழுவதும் ஒரே நாளில் 2.59 லட்சம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று

0 2005

இந்தியாவில் ஒருநாளில் புதிதாக கொரோனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 59 ஆயிரத்து 591ஆகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தில் இருந்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 591 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் 3 லட்சத்து 57ஆயிரத்து 295 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் ஒருநாளில் நாலாயிரத்து 209 பேர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 30 லட்சத்து 27 ஆயிரத்து 925ஆகும். நாட்டில் நேற்று மாலைவரை 19 கோடியே 18 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments