கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வியை இலவசம் என்று அறிவிக்கக் கோரி பிரதமருக்கு, சோனியா காந்தி கடிதம்

0 1415

கொரோனாவால் பெற்றோரைக் பறிகொடுத்த குழந்தைகளின் கல்வியை இலவசம் என்று அறிவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

தாய் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள், சம்பாதிக்கும் நபரின் இறப்பால் குடும்ப வருமானத்தை இழந்த குழந்தைகள்  போன்றவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கும் துன்பத்திற்கும் ஆளாகி எதிர்காலம் கேள்விக்குறியாகித் தவிப்பதாக சோனியா காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி தொடங்கி வைத்த நவோதயா கல்வி  நிலையங்கள் திறமை மிக்க கிராமப்புற மாணவர்களை கல்வியில் சிறந்தவர்களாக மாற்றும் கனவுடன் உருவாக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நவோதயா கல்வி நிலையங்களில் இணைக்குமாறும் பிரதமர் மோடிக்கு சோனியா கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments