தாம் உண்ண வைத்திருந்த உணவை இரண்டு ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கி, அவர்களின் பசியைப் போக்கிய பாசமிகு காவலர்.. வைரல் வீடியோ..!

0 12419

ஹைதராபாதில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் இரண்டு குழந்தைகளின் பசியைப் போக்கிய வீடியோ, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மகேஷ்குமார் என்ற போலீஸ்காரர் தமது வீட்டில் இருந்து டிபன் பாக்ஸில் கொண்டு வந்த உணவை சாலையோரம் பசியோடு இருக்கும் இரண்டு குழந்தைகளுக்குப் பரிமாறினார். இந்த மனிதாபிமான செயல் காவல்துறை மேலதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ளது.

மகேஷ்குமாரின் சகா ஒருவர் தற்செயலாக இந்த காட்சியைப் பார்த்து படம் எடுத்துவிட்டதால் அது பரவலான கவனத்தை வென்றுவிட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments