கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்துவதற்காக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்

0 1351

அமெரிக்காவில் உள்ள கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்துவதற்காக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளார்.

வாஷிங்டன் மற்றும் நியுயார்க்கில்  ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.இந்தியாவில் தடையின்றி தடுப்பூசிகள் கிடைப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தடுப்பூசிகள் உற்பத்தி குறைந்ததால் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏப்ரலில் தினசரி மூன்றரை கோடி தடுப்பூசிகள் கிடைத்து வந்த நிலையில் இந்த வாரம் அது ஒன்றரை கோடியாக குறைந்துவிட்டது. 90 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி அனுப்பி வைத்த மனிதநேய செயலும் இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments