தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 35ஆயிரத்தை கடந்தது

0 5441
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 35ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 35 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. 13 வயது தேனி சிறுமி உள்பட கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 397 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 35 ஆயிரத்து 576 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 25ஆயிரத்து 368 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 13 வயது தேனி சிறுமி, 19 வயது விழுப்புரம்
இளைஞர், 22 வயது செங்கல்பட்டு இளம்பெண், 25 வயது ராணிப்பேட்டை இளைஞர், 25 வயது திருவள்ளூர் இளம்பெண், 94 மற்றும் 95 வயது சென்னை முதியவர்கள் உள்ளிட்ட 397 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சென்னையில் புதிதாக 6,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவையில் 3,335 பேரும் செங்கல்பட்டில் 2,092 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர் - 1791, திருப்பூர் - 1,581 , ஈரோடு - 1,505,திருச்சி - 1,375 , மதுரை - 1,269கன்னியாகுமரி -1096 , தூத்துக்குடி - 1004 மற்றும் காஞ்சிபுரத்தில் 858 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள், 1298 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. மாநிலம் முழுவதும் 2,63,390 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments