கொரோனா தொற்றால் உயிரிழந்த போலீசார் 36 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.25லட்சம் நிவாரணம்

0 1346
கொரோனா தொற்றால் உயிரிழந்த காவலர்கள் 36 பேரின் குடும்பத்தினருக்கு தலா 25லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த காவலர்கள் 36 பேரின் குடும்பத்தினருக்கு தலா 25லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையில் இதுவரை அதிகாரிகள், காவலர்கள் என 84 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் ஏற்கனவே 13 பேரின் குடும்பங்களுக்கு தலா 25லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், மீதமுள்ள 71 பேரில் 36 பேர் குடும்பத்தினருக்கு தலா 25லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக 9கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 35 பேருக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் அதனை பரிசீலித்து அவர்களின் குடும்பத்துக்கும் தலா  25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments