அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேர்வு கட்டணம் செலுத்தாத 23 தனியார் பொறியியல் கல்லூரிகளின் இணைப்பு ரத்து செய்யப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

0 2149

ண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேர்வு கட்டணம் செலுத்தாத 23 தனியார் பொறியியல் கல்லூரிகளின் இணைப்பு ரத்து செய்யப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற திங்கட்கிழமைக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் பணத்தை கட்டவில்லையென்றால், இணைப்பு ரத்து செய்யப்படுவதோடு, அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படாது எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தர பணிக்காக பணம் கொடுப்பதாக புகார்கள் வருவதாகவும், அவ்வாறு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

கடந்த காலங்களில் கவுரவ விரிவுரையாளர்களின் நிரந்தர நியமனத்திற்கு குழு அமைக்கப்பட்டிருந்ததாகவும், குழுவில் முறைகேடு நடப்பதாக புகார்கள் வந்ததின் அடிப்படையில், அது ரத்து செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments