கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1572

கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை, மருந்து பற்றாக்குறை உள்ளிட்டவை குறித்து செய்திதாள்களில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில், ஆக்சிஜன் தேவை தற்போது சமாளிக்க கூடிய வகையில் உள்ளதாகவும், படுக்கைகள் அதிகரிப்பது, விரைவாக பரிசோதனை முடிவுகளை அறிவிப்பது குறித்து அரசிடம் கொண்டு செல்வதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கொரோனா இரண்டாவது அலை தணிந்தாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை வகுக்க வேண்டுமென அறிவுறுத்தி வழக்கு விசாரணையை மே 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments