சேலம் : பைக்கில் சென்ற போது மயங்கி விழுந்த மூதாட்டிக்கு துணிச்சலாக உதவிய இளம் பெண்ணை நேரில் அழைத்து பாராட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 4615

சேலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்த மூதாட்டிக்கு உதவ யாரும் முன்வராத நிலையில், துணிச்சலாக உதவிய இளம்பெண்ணை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுசீலா என்ற மூதாட்டியை அவரது மகன் பைக்கில் உட்கார வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூதாட்டி மயங்கி கீழே விழுவே, கொரோனா அச்சத்தால் யாரும் உதவ முன்வரவில்லை.

அவ்வழியாக வந்த இளையராணி என்ற பெண், மூதாட்டியை கண்டு முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப முயன்றதோடு, பைக்கில் உட்கார வைத்து கைத்தாங்கலாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இதனை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்திற்கு சென்றிருந்த போது, இளையராணியை நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments